அமெரிக்காவை தாக்க போவதாக வடகொரியா எச்சரிக்கை

interview_movie_001ஹாலிவுட் நடிகர்கள் ஜேம்ஸ் ரோன்கோ, சேத்ரோஜன் நடிப்பில் கொமடி படம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது.

அதில் வடகொரியாவை அமெரிக்கா தாக்குவது போலவும், வடகொரியாவின் ஏவுகணைகளையும் ராணுவ தளங்களையும் அமெரிக்கா அழிப்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வடகொரியா ஜனாதிபதி கிங்ஜாங்வுனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து அவரை அமெரிக்க உளவுப்படையினர் கொல்ல முயற்சிப்பது போலவும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகொரிய அரசு செய்தி தொடர்பாளர் இதுபற்றி கூறியிருப்பதாவது,

எங்கள் நாட்டினர் பெரிதும் மதிக்கும் எங்கள் தலைவரை கொச்சைப்படுத்துவது போலவும், அவரை அவமானம் செய்வது போலவும் அமெரிக்கர்கள் சினிமா படம் எடுத்துள்ளனர். இது எங்களை ஆத்தரமூட்டும் செயலாகும்.

வடகொரிய மக்கள் இதனால் கொந்தளிப்புடன் உள்ளனர். அமெரிக்கா உடனடியாக அந்த படத்தை வெளியிடாமல் தடை செய்ய வேண்டும். அதையும் மீறி படம் வெளிவந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அமெரிக்கா மீது இறக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துவோம்.

எங்கள் தாக்குதல் கொடூரமானதாக இருக்கும். இதை அமெரிக்கா உணர்வு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் பெயர் இன்டர்வியூ என்பதாகும். இது ஒக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.