ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவு – ரஷ்யா எதிர்ப்பு

ukrain_eu_deal_002சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த உக்ரைன், ஜார்ஜியா, மால்டோவா ஆகியவை ஐரோக்கிய யூனியனுடன் கூட்டாண்மை உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

ரஷ்யாவின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த உடன்பாடு, பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் இந்த நாடுகள் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மேற்கத்திய நாடுகளை சார்ந்திருக்கவும், கட்டுப்படவும் நேரும்.

இந்த உடன்பாட்டை உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ போரோஷெங்கோ வரவேற்றுள்ளார்.

இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்,

‘‘இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் ஆகும். குறிப்பாக 1991–ம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் காரணமாக அரசியல் ஸ்திரமற்ற நிலையில் இருந்து உக்ரைன் மீண்டு, புதிய தொடக்கத்தை சந்திக்கும். நவீனமயமாகும். இந்த உடன்பாடு ஐரோப்பிய யூனியனின் ஒருமித்த மனநிலையின் வெளிப்பாடு ஆகும்’’ என கூறினார்.