அமெரிக்கா, பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த சதி – விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

manchester_airport_001சிரியாவில் இயங்கும் தீவிரவாதிகள் விமான நிலையங்களின் பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை உருவாக்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்லுகிற விமானங்களில் இத்தகைய நவீன வெடிகுண்டுகளை வைத்து தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று தெரிகிறது.

இது தொடர்பான உளவு தகவல்களால் உஷார் அடைந்த அமெரிக்கா, தனது நேச நாடான இங்கிலாந்து நாட்டையும் உஷார்படுத்தி உள்ளது.

இதையடுத்து இங்கிலாந்தில் முக்கிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக உலகின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரித்திருந்தாலும், பிரிட்டன் விமான நிலையங்கள் வழமை போன்று இயங்கி இருக்கின்றன.

மெஞ்செஸ்டர் விமான நிலையத்தில் கைப்பைகள் சோதனையிடப்பட்டாலும் ஹீத்ரோ, கட்விக் விமான நிலையங்கள் மாற்றமின்றி இயங்கி இருக்கின்றன.

குறிப்பாக, சிரியாவிலும், ஈராக்கிலும் ஆயுதப் போராட்த்தை நடத்தும் ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சிக் குழுவின் மீது அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.

manchester_airport_001 (1)