இஸ்ரேலிய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுததாரிகள் கொலை

மத்திய கிழக்கின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன ஆயுததாரிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கல்லெறிகிறார்.காசாவில் பதற்றம் அதிகரித்துள்ளது

காசாவிலிருந்து இஸ்ரேலின் தென்பகுதியில் மேலும் ரொக்கெட் குண்டுகள் வந்து விழுந்ததை அடுத்து இந்த விமான குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

காசாவின் தென்பகுதியிலுள்ள ஒன்றுகூடும் இடமென ஹமாஸ் அமைப்பினர் கூறும் ஒரு இடத்தில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் தம்முடைய படையைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

வேறு தாக்குதல்களில் மற்ற மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு இஸ்ரேல் விலைகொடுக்க நேரிடும் என்று ஹமாஸ் சூளுரைத்துள்ளது.

சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்த விரும்பவில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் அமைப்புக்கு நேரடியாக தகவல் அனுப்பியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸிடம் நேரடியாகப் பேசுவதென்பது மிகவும் அரிது.

பாலஸ்தீன பதின்ம வயது இளைஞன் முகமது அபு காதிரின் கொலையை அடுத்து இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. -BBC