ஈராக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி அமைப்பின் தலைவர், அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
ஈராக்கில் பலுஜா, மொசுல், திக்ரித் ஆகிய நகரங்களை ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வரும் சன்னி பிரிவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியுள்ளது.
மேலும் சிரியாவில் கைப்பற்றிய நகரங்களை வைத்து அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய நாட்டிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதியை (42) தான் தலைவராக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4ம் திகதி முதன்முறையாக ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி கூறியவதாவது, பல ஆண்டுகளாக நடத்திய புனிதப் போரில் போராளிகளுக்கு ஆண்டவன் வெற்றியை பரிசாக அளித்துள்ளான்.
வீரர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்துவிட்டு தங்களின் இமாமை தேர்வு செய்ய கலிபாவை அறிவிக்க வந்தனர்.உங்களுக்காக பொறுப்பை ஏற்பது ஒரு சுமை தான். நான் உங்களை விட சிறந்தவன் ஒன்றும் இல்லை. நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று நினைத்தால் எனக்கு உதவுங்கள்.
ஆனால் நான் தவறான பாதையில் சென்றால் எனக்கு அறிவுரை வழங்கி என்னை தடுத்து நிறுத்துங்கள். மேலும் நான் இறைவனை கீழ்படிவது போன்று நீங்கள் என்னை கீழ்படிந்து நடக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இவர் பேசிய காணொளி கேலிக் கூத்தாக உள்ளது என்றும் அதில் பேசியிருப்பது அவர் தானா எனவும் ஈராக் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
ஏனெனில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் தான் பாக்தாதி காயம் அடைந்ததாக ஈராக் அரசு தெரிவித்திருந்தது.
ஈராக்கில் நடந்ததுபோல் இந்தியாவிலோ அல்லது மலேசியாவிலோ பள்ளிவாசல்கள் உடைக்கபட்டிருந்தால் 3ஆம் உலக போர் ஆரம்பித்து இருக்கும்! இறைவன் நாமத்தை சொல்லி மற்ற இனத்தவரை ஒரு வழி ஆக்கியிருப்பிங்க? 1998இல் பல கோவில்கள் உடைக்கப்பட்டது மலேசியாவின் வட மாநிலங்களில்.இறைவன் ஒருவன் என்பது உண்மையானால் அந்த ஒருவனே நம் அனைவரையும் இந்த பூமியில் படைத்ததை ஏன் மறுக்கபடுகிறது?மற்றவர்களை மதித்தால் நீங்கள் மதிக்க படுவீர்கள்…