‘புலித்தோல் விற்பனையை சீனா ஒப்புக் கொண்டுள்ளது’

tiger_sleepingபுலித்தோல் விற்பனையை அனுமதிக்கின்றமைமைய சீனா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் புலிகளின் தோல்களை வணிக நோக்கத்திற்காக விற்கும் நடவடிக்கையை சீனா அனுமதிப்பதாக குற்றம்சாட்டும் முக்கிய அறிக்கையொன்று ஜெனீவாவில் நடந்துவரும் இந்த சந்திப்பின்போது வெளியிடப்பட்டுள்ளது.

சைட்ஸ் என்ற ‘அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்பாடு’ தொடர்பான சீனாவின் தூதுக்குழுவினர், இந்த புலித்தோல் விற்பனை நடந்துவருவதை ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

அதேநேரம், புலிகளின் எலும்புகளின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுக்குழுவினர் கூறியுள்ளனர்.

சீனாவில் செல்வந்தர்களின் வீடுகளில் ஆடம்பரப் பொருளாக புலிகள் மற்றும் சிறுத்தைகளின் தோல்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -BBC