கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11 நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற விதிமுறையை மாற்றுவதற்கான தீர்வுகள் உண்டு என்றும், அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது தனது வேலை என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.
இத்தாலிய செய்தித்தாளான லா ரிபப்ளிக்காவுக்கு அளித்த ஒரு பேட்டியில், பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரம் கத்தோலிக்கத் திருச்சபையை பீடித்துள்ள தொழுநோய் என்று ஃபிரான்சிஸ் கூறினார்.
பேராயர்களிலும், கார்டினல்களிலும் கூட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும், கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமாரிகளில் சுமார் இரண்டு சதவீதம் பேர் சிறார்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேவையான கண்டிப்போடு இப்பிரச்சினைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தான் உறுதியுடன் இருப்பதாய் அவர் தெரிவித்துள்ளார். -BBC
முதலில் பன்றி உண்ணுவதையும் (பன்றி உறவு பார்க்காமல் எல்ல பன்ற்யிடமும் உறவு வைத்துகொள்ளும்) மட்டுமொண்டு துறவி யாவது தடை செய்ய வேண்டும், சாதரண புழு பூட்சிகல் கூட உடல் உறவில் ஈடுபடுகின்றன 6 அறிவு படைத்த மனிதன் எப்படி மன இச்சைகளை அடக்கி ஆழ முடியும், அதுவும் இப்ப உள்ள கால சூழ்நிலையில். பெண்கள் ஆடை விசயங்களை சொல்லதேவையில்லை .
அது ஏன் பன்றி மட்டும்? மிருகங்களைக் கொன்று சாப்பிடுவதே ஒரு கொடூரம். இதில் வேறு நல்லது, கெட்டதா! மன இச்சைகளில் 98% சரியாகத்தானே இருக்கின்றனர். ஆக, மனிதனால் மன இச்சைகளை அடக்கி ஆள முடியும் என்பதைத் தானே இது காட்டுகிறது. 2% தவறு செய்கின்றவர்கள் தவறான இடத்தில் இருக்கின்றனர் என்பது தான் உண்மை!