போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பின் தளபதியை நைஜீரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியாவில் கடுமையான முஸ்லிம் சட்டங்களை அமல்படுத்தும்படி, போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
அந்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் அல்லாதவர்களை கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்கின்றனர்.
சிபோக் பகுதியில் உள்ள பள்ளிக்குள் நுழைந்து, 200க்கும் மேற்பட்ட மாணவியரை கடத்திச் சென்று, இதுவரை விடுவிக்கவில்லை.
இந்த பயங்கரவாத அமைப்பை, சர்வதேச பயங்கரவாத அமைப்பாக, ஐ.நாவின் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த அமைப்பின் தளபதியான முகமது ஜாகரியை, அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து நைஜீரிய பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நைஜீரியாவின், போச்சி மாநிலத்தில் உள்ள, பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் ஒன்றான, பால்மோ காட்டுப் பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
காட்டுப் பகுதியின் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பதுங்குமிடத்தில், முகமது ஜாகரியை கைது செய்தோம். கைது செய்யப்பட்டவன், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏழு பேரை, கொடூரமாக கொன்றுள்ளான்.
இவனைப் போன்ற பல பயங்கரவாதிகள், இன்னும் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர் என்றும் அபுபக்கர் ஷெகாவ் தலைமையில் இந்த அமைப்பினர் இயங்கி வருகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துடிதுடித்து சாகும் வரை தூக்கிலிடுங்கள் !