காசாவில் ஐந்து மணி நேர ” மனித நேயப்” போர் நிறுத்தம்

ஐந்து மணி நேர போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி சந்தையில் பொருட்கள் வாங்கக் குழுமியிருக்கும் காசாவாசிகள்

பாலத்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒன்பது நாட்களாக நடந்த மோதலுக்குப் பின்னர், காசாவில் ஐந்து மணி நேர மனித நேயப் போர் நிறுத்தம் இப்போது அமலில் இருக்கிறது.

காசாவாசிகள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள இந்த மோதல் நிறுத்தம் அனுமதிக்கும் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

ஆனால், காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
இந்த மோதல் நிறுத்தம் ஐநா மன்றத்தின் வேண்டுகோளை அடுத்து உடன்பாடானது.
இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரெஸ் ஒரு இஸ்ரேலியத் தாக்குதலில் நான்கு பாலத்தீனக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு தான் வருந்துவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தக்குழந்தைகள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் , அவர்கள் காசா கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றல்ல என்று அவர் கூறினார்.
இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்ட இலக்குகள் ஹமாஸ் தீவிரவாதிகள்தான் , இதில் குழந்தைகள் இறந்தது ஒரு துன்பியல் விளைவு என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்று ஹமாஸ் வர்ணித்திருக்கிறது. -BBC