அணுவாயுத திட்டப் பிரச்சினையில் ஈரானுடன் உடன்பாடு செய்து கொள்ள உலக வல்லரசு நாடுகள் கால அவகாசம் வழங்கியிருந்தன.
இந்நிலையில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதன்போது ஈரானுக்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க வல்லரசு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் உயர் பிரதிநிதி கேதரின் ஆஷ்டனும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப்பும் நேற்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து, ஈரான் மீதான 8 பில்லியன் டொலர் நிதி முடக்கத்தை விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ஈரான் தன்வசமிருக்கும் செறிவூட்டிய யுரேனியத்தில் 20 சதவீதத்தை எரிபொருளாக மாற்றி விட வேண்டும்.
மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.