ஈராக்கின் முக்கிய நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்கு இஸ்லாமிய நாடு உருவாக்கியுள்ளனர்.
ஈராக்கின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான மொசூலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு கடும் நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் விதித்தனர்.
அதன்படி அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். சிறப்பு வரி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மொசூல் நகரை விட்டு வெளியேற வேண்டும். மீறினால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரித்தனர்.
இதை அங்குள்ள மசூதிகளின் ஒலி பெருக்கிகள் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். இதனால் அச்சம் அடைந்த கிறிஸ்தவர்கள் மொசூல் நகரில் இருந்து குடும்பங்களுடன் வெளியேறி வருகின்றனர்.
குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள கோஹீக், அர்பில் நகரங்களுக்கு அவர்கள் புறப்பட்டு செல்கின்றனர். இது ஈராக்கில் தன்னாட்சி உரிமை பெற்ற பகுதியாகும். மொசூல் நகரில் இருந்து வெளியேறும் கிருஸ்தவர்களில் பலர் இப்பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மொகசூல் நகரில் உள்ள சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஸ்துவ தேவாலயத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தீ வைத்து எரிக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை வெளியாகியுள்ளது.