காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய இராணுவம், அவர் இறந்துவிட்டார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளாகி ஆறு சிப்பாய்கள் இறந்த கவச வாகனத்தில் இவரும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இஸ்ரேலிய படைத்தரப்பில் 27 பேரும், இஸ்ரேலிய சிவிலியன்கள் 2 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத் தரப்பில் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை இதுவரையில் மட்டுமே 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது ரொக்கெட் மற்றும் மோர்டார் குண்டுகளை வீசுவதை பாலஸ்தீன ஆயுததாரிகளும் தொடர்ந்துவருகின்றனர்.
இதற்கிடையில், இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதற்காக எகிப்து வந்துள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி, காசாவிலிருந்து வீசப்படுகின்ற ரொக்கெட்டுகளில் தம்மைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேல் செய்வது பொருத்தமான, நியாயமான முயற்சி என்றாலும் அதற்காக மனித உயிர்களில் கொடுக்கப்படும் விலை அமெரிக்காவுக்கு ஆழ்ந்த கவலையை தந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் ஐநா தலைமைச் செயலர் பான் கி மூனை சந்தித்த பின்னர் கெர்ரி இக்கருத்தைத் தெரிவித்தார்.
உடனடிப் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பான் கி மூன் மீண்டும் வலியுறுத்தினார்.
இருதரப்புக்குமிடையே போர்நிறுத்தம் கொண்டுவருவதில் பிராந்திய நாடுகள் முக்கியமான பங்காற்ற முடியுமமென்று பான் கி மூன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார். -BBC
தங்கள் நாட்டை அபகரித்து கொண்ட வந்தேறி யூதர்களுக்கு எதிராக, தன் தாய் நாட்டுக்காக போராடும் பாலஸ்தீனர்கள் ஆயுததாரிகளா? போராளிகளா?
தோழருக்கு சரித்திரம் தெரியவில்லையா? அல்லது ஓட்டுக்காக கலைஞர் டிவி போல வாதத்தை முன் வைக்கிறீரா? ஒரு உதாரணம் சொல்லுகிறேன். தோழர் பதில் சொல்லட்டும். நீங்கள் தமிழர் என்று வைத்துக்கொள்வோம். அதிகமான வருமை காரனமாக தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல மலேசியாவிற்கு வந்து குடியேறி வளமாக சில நூறு ஆண்டுகளாக இங்கேயே வாழ்கிறீர்கள். ஒரு 10% தமிழர்கள் மாத்திரம் தமிழகத்திலேயே தங்கிவிட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் பெரும்பாலோர் தமிழகத்தைவிட்டு வெளியேறியதைப் பயன்படுத்தி பக்கத்து மாநிலமான ஆந்திரத் தெலுங்கர்கள் தமிழர்களின் தமிழகத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டதாக எண்ணிக்கொள்ளுங்கள். திடீரென ஒரு மோசமான அரசியல்வாதி (ஹிட்லர் போல, ராஜபக்ஷே போல) மலேசியாவில் தோன்றி தமிழனை கொலை செய்து கருவறுத்து நாட்டைவிட்டே விரட்டுவதாக வைத்துக்கொள்ளுங்கள். வந்த அத்தனைத் தமிழர்களும் மீண்டும் தமிகத்திற்குச் சென்று மெல்ல மெல்ல குடியேறி மீண்டும் தமிழகத்தின் பெரும் பகுதியை தமிழர்கள் தங்கள் வசமாக்கிக்கொண்டதாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நாம் இல்லாத சமயத்தில் குடியேறிய தெலுங்கர்கள் உங்களைப்பார்த்து, நாடில்லாத நாதேறியே எப்படி எங்கள் நாட்டில் எங்களை மோசம் செய்யலாம் என்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் நீங்கள் உங்களை வந்தேறி என ஒத்துக்கொண்டு உங்களின் பூர்வீக தமிழகத்தைவிட்டு வெளியேறுவீர்களா? அல்லது , “இது என் மூதாதையின் மண்.இதைவிட்டு என்னைப் போகச்சொல்ல தெலுங்கனே உனக்கு உரிமை இல்லை!” என்று எதிர்வாதம் செய்து போராடுவீர்களா? இப்போது சொல்லுங்கள் யார் வந்தேறிகள் என்று. வந்தேறிகள் யூதர்களா? அல்லது பாலஸ்தீனர்களா? சரித்திரம் தெரியாமல் பேசக்கூடாது. நான் இப்படி எழுதுவதால் இஸ்ரேலியன் செய்யும் கொலையை ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே வேளையில் ஹாமாஸ் செய்யும் சில்லுண்டித்தனத்தை ஆதரிக்கவும் முடியாது. பாலஸ்தீனனைப் பாலஸ்தீனராகப் பார்க்கவேண்டுமேயன்றி மதச்சாயம்பூசி ஒரு மதப் போராக உருவகிக்கக்கூடாது என்பதே அடியேனின் ஆதங்கம்.
anonymous உங்க வரலாறை படித்து ஏன் உடம்போ சிலிர்த்து விட்டது, உங்களுடைய உலக அறிவை கண்டு வியக்கிறேன். முதலில் ஒரு கருத்தோ அல்லது கட்டுரையோ எழுதுவதற்கு முன்பு உண்மை வரலாறை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு எழுத தெரிந்து கொள்ளுங்கள், சும்மா இந்திய சினிமா இயக்குனர்கள் மாதிரி பொய் மூட்டைகலை அவிழ்த்து விடகூடாது. வரலாறு தெரிய வில்லையென்றால் சும்மா அமைதியாக இருப்பது மேல்.