சுடப்பட்ட மலேசிய விமானம் : வலுக்கும் மோதல்கள்

pro_russianஉக்ரைனின் வான்பரப்பில் கடந்த வாரம் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உக்ரைனிய போர் விமானம் ஒன்று, அந்த மலேசிய விமானத்துக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து உக்ரைன் அரசிடமிருந்து இப்போது ரஷ்யா விளக்கம் ஒன்றைக் கோரியுள்ளது.

மலேசிய விமானம் பயணித்த பாதையில் எந்தவொரு ஏவுகணைத் தாக்குதலும் நடந்ததாக தம்மால் கண்டறிய முடியவில்லை என்றும், கிளர்ச்சியாளர்களுக்கு ‘பக்’ வகை ஏவுகணைகளைத் தாங்கள் அளிக்கவும் இல்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு நேர் மாறாகவுள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பின் தகவல்கள், அந்த ஏவுகணை கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ளப் பகுதியிலிருந்து ஏவப்பட்டது என்று கூறுகின்றன.

இதேவேளை, இதுகுறித்த விசாரணைகளை நடத்தி வருபவர்களுக்கு பாதுகாப்புத் தேவை என்று ரஷ்ய அதிபர் புடின் கூறுகிறார். -BBC