தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 39 லட்சம் மக்கள் உணவின்றி பசியில் வாடுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த நிதிகளை உடனடியாக வழங்கி அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை காக்குமாறு ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் ஆட்சி அமையாததே மக்களின் இந்த பரிதாப நிலைக்குக் காரணம்.
அரசியல்வாதிகள் பண்ணுகின்ற அட்டுழியங்கள் சொல்லி மாளாது. எண்ணைய் வளம் உள்ள ஒரு நாட்டில் உணவு பஞ்சமா. ஒ! இறைவா! இந்த மக்களை நீர் தான் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்திப்பது தவிர வேறு நாம் என்ன செய்ய முடியும்!