இருளில் மூழ்கும் அபாயத்தில் காஸா! என்ன நடக்கப் போகிறது?

gaza_powerplant_001இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்ததால் தற்போது அந்நகரமே இருளில் மூழ்கும் ஆபாயத்தில் உள்ளது.

கடந்த 7ம் திகதி காஸாவில் தாக்குதலை நடத்த தொடங்கிய,இஸ்ரேலை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் தாக்குதல் ஒரு முடிவிற்கு வந்த பாடில்லை. தினந்தினம் நூற்றுக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்படுவது சர்வதேச நாடுகளுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர் தாக்குதால் காஸாவில் உள்ள அனைத்து மின் நிலையமும் தகர்க்கப்பட்டு,ஒரே ஒரு மின் நிலையம் மட்டும் இருந்துள்ளது.

ஆனால் அதுவும் தற்போது குண்டு வீச்சிற்கு இரையானதால், காஸாவே இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் நிலைய செய்திதொடர்பாளர் கூறுகையில், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருள் வைக்கப்பட்டிருந்த டாங்கர்களில் ஒன்றை முற்றிலுமாக இஸ்ரேல் படையினர் அழித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே காஸாவில் செய்யப்பட்டு வந்த மின் விநியோகமும், இப்போது இல்லாமல் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காசாவில் 24 மணி நேர போர் நிறுத்தத்திறகு ஹமாஸ்-ஜிகாத் தயார்

காசா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் வீசி தாக்கி வருகின்றனர். எனினும், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களே அதிக அளவில் பலியாகி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அதன்பின்னர் மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மேலும் 24 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் தயாராக இருப்பதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

“ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் சகோதரர்களிடம் பேசியபிறகு, ஒவ்வொருவரும் 24 மணி நேரத்திற்கு மனிதாபிமான போர் நிறுத்தம் செய்ய விரும்புவது தொடர்பான அறிவிப்பை பாலஸ்தீன தலைவர்கள் வெளியிடுவார்கள். அனைத்து அரபு மற்றும் சர்வதேச கட்சிகளிடமும் இதற்கு ஆதரவு கேட்போம்.

இதனை ஏற்க இஸ்ரேல் மறுத்தால் பின்னர் ஏற்படும் கடுமையான விளைவுகளுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு” என்று பாலஸ்தீன விடுதலை இயக்க பொதுச்செயலாளர் யாசர் அபேத் ரப்போ எச்சரித்தார்.

போர் நிறுத்தத்தை 72 மணி நேரமாக நீட்டிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையையும் ஏற்கிறோம். சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மூத்த தலைவர் அப்பாஸ் தலைமையில் அனைத்து பிரிவு பிரதிநிதிகளும் எகிப்து சென்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.