காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் மும்முனைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
கான் யூனிஸ் நகரின் பிரபல வர்த்தகப் பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய உக்கிர தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கு அதிகமானோர் காயமடைந்தனர்.
வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் ஐ.நா.சபை நடத்தி வரும் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்
இந்த பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி தாங்கிய வாகனங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததுடன், 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்த்து கடந்த 24 நாட்களாக காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.
பலியானவர்கள் மற்றும் காயமடைந்த சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முன்னறிவிப்பு இன்றி பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடக்கு காஸாவில் உள்ள ஐ.நா. நடத்தி வரும் ஜபாலியா பெண்கள் ஆரம்ப பாடசாலையில் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இது வரை 17 முறை தெரியபடுத்தி விட்டோம். குறிப்பாக, இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய இரவு கூட இது தொடர்பாக இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளோம்.
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதை விட மிகவும் வெட்கக் கேடான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. மிகவும் வெட்கக் கேடானதும், நியாயப்படுத்த முடியாததுமான இந்த கொடூர தாக்குதலை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக, தாக்குதல்களை கைவிட்டு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் உடன்பட வேண்டும்.
இந்த மோதலுக்கான அடிப்படை காரணம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், பேச்சு வார்த்தை மூலம் அவற்றுக்கு தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
ஏழைகளையும், எளியோரையும் ஆயுதமேந்திய அக்கிரமக்காரர்கள் அழிப்பதுதான் இரண்டு முன்னணி மதங்கள் தோன்றிய இடத்தின் அடையாளமோ?. வரலாற்றை மெய்பிக்கின்ரார்கள் மத வெறியர்கள்.
தேனீ ,உலகில் மதம் எப்போது தோன்றியதோ அப்போதே உலகில் எளியோரையும் ,ஏழைகளையும் அக்கிரமக்காரர்கள்
அவர்களின் மதத்தில் வற்புறுத்தி சேர ஆயுதங்களை ஏந்தினர் ,மதம் மனிதனை
பிரிக்கும் ,மனித நேயம் மட்டுமே மனிதர்களை இணைக்கும்
அது எந்த மதமாக இருந்தாலும் சரி.தேனீ அக்கா .
முன்பு தமிழ் ஈழத்தில் , இறுதி கட்ட போரின்போது ஆலயங்கள் , பள்ளிகூடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இதே போன்று குண்டு மழை பொழிந்த பொழுது யாரும் வாயை திறக்கவிலையே !!!!
அங்கும் இதே போன்று அப்பாவிகள் (கைகுழந்தைகள் உட்பட ) பல்லாயிர கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர் . இதை பார்த்து தமிழன் மட்டும் தானே அழுதான் !!!! எங்கே போனது ஐநா சபை ????
யார் பேசுவது ?பான் கீ மூன் ஹி ஹி ஹி போடா பன்னி !பதினேழு தடவை அறிவிப்பு கொடுத்து விட்டீர்களா! பிறகு ஏன் தாமதம், இஸ்ரேலுக்குள் துறுன் கொடுக்கவேண்டியதுதானே! பெருசா வெச்சிடுவான் என்ற பயம் இருக்குதில அப்போ முடிக்கொண்டிருல மாமா குட்டி awak di mana !எலேய் பான் கீ மூன் ஈழத்தில் இதைவிட மிககொடூரமாக தமிழர்களை கொன்று குவித்தானே சிங்களவன் அப்பொழுது நீ எங்கலே ஊ…பசென்றாய்?..