கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்கள் பட்டியலில் லண்டன் முதலிடம்

londonலண்டன் மிக அதிக எண்ணிக்கையிலான கோடிஸ்வரர்களைக் கொண்ட நகராக உருவாகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

இந்த ஆய்வு தென் ஆப்ரிக்காவில் இருந்து இயங்கும் ஆலோசனை நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டிருக்கிறது.

லண்டன் மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மிலியன் டாலர்களுக்கும் மேலான நிகர சொத்துக்களை வைத்திருப்பதாக அந்த ஆய்வு காட்டுகிறது.
லண்டன் ஒரு சர்வதேச நகரம் என்ற வகையிலும்,ஐரோப்பாவின் முக்கிய நிதித்துறை மையம் என்ற வகையிலும், உலகெங்கிலிருந்தும் உள்ள பணக்காரர்களை ஈர்த்திருப்பதாக இந்த ஆலோசனை நிறுவனம் கூறுகிறது.

ஆனால் கோடீசுவரர்கள் அதிகம் உள்ள நகராக லண்டன் இருக்கிறது என்றாலும், மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் உள்ள நகரங்கள் பட்டியலில், லண்டன் மூன்றாவது இடத்தையே வகிக்கிறது. ஹாங்காங் மற்றும் நியுயார்க் நகரங்கள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.

இந்தப் பட்டியல் குறைந்தது 10 மிலியன் டாலர்கள் நிகர சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலானது. -BBC