ஈராக்கில் உள்ள யாஸிடி என்னும் சிறுபான்மை இன மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர்.
கடந்த யூன் 9ம் திகதி ஈராக் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் மொசூல் நகரையும், சிரியாவில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்த இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே தலைவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நிறுவிய அபூபெக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார்.
இதன்பின் கிறிஸ்துவர்களை வெளியேற்றும் வகையில் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது ‘ஜிஷியா’ வரி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டதால், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போது ஈராக்கில் வெறும் 1 லட்சம் பேரை கொண்ட மிக சிறுபான்மையினரான “யாஸிடி” இனத்தவரை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொத்து கொத்தாக கொலை செய்து வருகின்றனர்.
ஜொராஷ்டிரிய மதத்தை பின்பற்றும் இவர்கள் ‘பேய்களை வழிபடுபவர்கள்’ எனக் கூறி வேட்டையாடி வருகின்றனர். மேலும் இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள், அடிமைகளாக ஆக்கப்பட்டது மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகள், ஆதரவற்று விடப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்க மலைகளில் தஞ்சமடைந்த சில மக்கள் உணவு, நீர் ஏதும் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 40 பேர் குழந்தைகள் ஆவார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் யாஸிடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், இதே நிலை நீடித்தால், சிறிது நாட்களில் எங்களது இனமே அழிந்துவிடும் எனக் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் யின் இச்செயலிற்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தின் புனிதத்தையும் உண்மையையும் பல கும்பல்கள் சொந்த நலனுக்காக அழித்துக் கொண்டிருக்கிறது. அல்லாவே நீரே சாட்சி. யாரும் யாரையும் கொள்வதற்கு அனுமதி கிடையாது.
கண்டனம் தெரிவித்தால் எல்லாம் முடிந்து விடுமா? அராஜகத்தை அழித்தொழிக்க ஐ.நா.வின் செயல்பாடுதான் என்ன? வல்லவன் அப்பாவி மக்களை அழிப்பான். அதை தட்டிக்கேட்கும் அதிகாரம் பெற்ற சபை கண்டனம் மட்டும் தெரிவிக்கும் என்றால் நீங்கள் எதற்கு?
இப்பதான் ஒபாமா போர் விமானத்தை அனுப்பி குட்டையை குழப்புகின்றார். கூடிய விரைவில் ஈரான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை அனுப்பி மறைமுக போர் நடத்தும். அத்துடன் ரஷியாவும் சேர்ந்துக் கொண்டு குடுத்தனம் நடத்தும். ஈராக் மக்கள் அம்போதான். அடுத்த ஆப்கானிஷ்டானாக மாறாமல் இருந்தாலே பெரிய புண்ணியமாகும்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஓரளவு பகுதிகளைப் பிடித்துள்ள ISIS ஓர் இஸ்லாமிய caliphate சாம்ராஜ்யம் உருவாக்கப் போவதாக அதன் தலைவர் பாக்டாடி கூறிவருகிறார். தற்பொழுதைய அல்கைடா தலைவர் சாவாஹிரி உடன் முன்பு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். இப்பொழுது அவர்களுக்குள் முறுக்கம் அதிகம். ISIS உறுப்பினர் சன்னி முஸ்லிம். ஆகையால் ஈரானின் ஆதரவு பெற்றுள்ள தற்போதைய ஈராக்கின் ஷியா ஆட்சியாளர்கள் அவர்களின் முக்கிய எதிரி! இப்பொழுது ISISன் தாக்குதலைத் தாங்க முடியாமல் பாக்தாத் தவிக்கிறது. பக்கத்து சிரியாவிலும் மத மிதவாதியான அதிபர் ஹாசாத்தை இந்த ISIS எதிர்க்கிறது. ஈராக் அரசு கேட்டுக்கொண்டுள்ளதுபோல் US விமானங்கள் / எரிபடைகள் ISISஐ தாக்குமானால் ஈரான் எதிர்க்காது; சந்தோசப்படும்!!!! மிக ஆச்சரியம், ஆனால் உண்மை.!!! நமது நாட்டில் அரசியல் கட்சி நண்பர்கள் பின் விரோதிகள் ஆவது போல. இங்கு USன் பரம விரோதிகள் ஈராக்/ஈரான் ISIS விடயத்தில், மற்ற விடயங்களில் உள்ள பகைமை மறந்து, ஒரு நோக்குக் கொண்டுள்ளனர்!! ISIS அங்கு பலமாகக் கால் ஊன்றினால் மத்திய கிழக்கில் உள்ள அரசர்கள் கதை முடிவுக்கு வரும். இது நடக்க US ஒருபோதும் விடாது. US ISISஐ தாக்குவதை அனேகமாக எல்லா மத்திய கிழக்கு நாடுகளும் வரவேற்கும். வழமைபோல் இரஸ்யாவும் சீனாவும் கத்தக்கூடும். அவ்வளவுதான்.
அன்பு ,கருணை ,இரக்கம்,மனிதநேயம் எல்லாம் மடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது சண்டாலார்கல் மதம் ,மதம் என்று அழிந்தேபோவர்கள் ‘சிவ சிவா
உண்மைதான் க.ம.போ. ஈரானும் சியா முஸ்லிம் மக்களால் ஆளப்படும் ஈராக் அரசாங்கத்துடன் கை கோர்த்துக் கொள்ளும். ஆனால் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பணபலத்தையும் ஆயுத பலத்தையும் கொடுப்பவர்கள் யாராக இருக்க முடியும்?. மத்திய கிழக்கு ஆசியாவில் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் இருந்தால் பயன்பெறப் போவது யார்?. யோசிக்க வேண்டிய விஷயம்.
இந்த ISISகு பல ஆண்டுகளாக குவைத், காத்தார், சவுதி போன்ற நாடுகளில் உள்ள பெரும் செல்வந்தர்கள் சிலர் அதிக அளவில் பண உதவியை, குறிப்பாக குவைத் வழியாக செய்து வந்துள்ளனர். இந்தப்பணம் பின்னர் துருக்கி மற்றும் ஜோர்டான் வழியாக வடக்கு சிரியாவுக்குள் செல்கிறது. இப்பகுதி ISIS கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக கடந்த 2 1/2 ஆண்டுகளாக இது அதிக அளவில் நடந்து வருகிறது. இது அரசாங்கங்கள் சம்பந்தப்படாத, சில தனியார் செல்வந்தர்கள் இரகசியமாக செய்யும் பணபட்டுவாடா ஆகும். சன்னி பிரிவை சேர்ந்த இவர்கள் அப்பகுதியில் isisi மூலம் ஷியா செல்வாக்கை முடக்க இப்படி செய்கின்றனர். அண்மைய காலமாக அமெரிக்க கருவூலம் இந்தக் ‘கருப்புசந்தை’ பண பட்டுவாடாவுக்கு முடிவு கட்டுமாறு குவைத்துக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறது. தனது கட்டுப்பாட்டில் உள்ள வட சிரியாவின் எண்ணெய்க் கிணறுகள் மூலமாகவும் தனது போர் இயந்திரத்துக்கு பணம் வருகிறது. இராக்கில் ஒவ்வொரு நகரைப் பிடிக்கும் போது புதிய ஈராக் இராணுவத்துக்கு US விட்டு சென்ற ஆயுதங்கள் இவர்கள் கைவசம் ஆகிறது. சமீபத்தில் isis மொசூல் நகரைக் கைப்பற்றிய பொழுது அங்குள்ள பிரதான வங்கியில் இருந்த US430 மில்லியனை வசப்படுத்தியது. ஐரோப்பா நாடுகளில் உள்ள சில சமய தீவிரவாதக் குழுக்கள் isis-கு பண, வீரர் பலம் சேர்க்கின்றனர். மலேசியாவில் இருந்தும் சிலர் சென்றுள்ளதாக செய்தி. இப்படியாக பல வழிகளில் அது தற்பொழுது வெற்றி நடை போடுகிறது. US தலையீடு இதற்கு முற்றுபுள்ளி ஆகுமா?!