ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்கா

obamaவடக்கு ஈராக்கில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து பொது மக்களை பாதுகாக்க இராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களை அடங்க ஈராக் விரும்பினால் அமெரிக்கா இராணுவ உதவி அளிக்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது. ஈராக் விரும்பினால் கிளர்ச்சியாளர்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை நடைபெற சாத்தியம் உள்ளதால் அதை தடுக்க நாங்கள் கவனமுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவோம்.

கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் ஈராக்கின் வடக்கு மலைப்பகுதியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை காப்பாற்ற ஈராக் படைகளுக்கு உதவி வழங்கப்படும் என ஒபாமா தெரிவித்தார்.

இது தொடர்பாக தகவலை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது.