இஸ்ரேல் – -பாலஸ்தீனம் பேச்சுவார்த்தை பாதிப்பு

Israelகெய்ரோ: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக, எகிப்து நாட்டின் சமரச முயற்சிக்கு பின்னடைவாக, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இஸ்ரேல் நேற்று முன்வரவில்லை; அதனால், பேச்சிலிருந்து வெளியேறுவதாக, பாலஸ்தீனமும் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலையுடன் முடிவுக்கு வந்த, 72 மணி நேர சண்டை நிறுத்தத்தை தொடர, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில், சமரச பேச்சு நடைபெற்று வந்தது. அதில், இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ‘ஹமாஸ்’ பயங்கரவாதிகளின் தலைவர்கள் பங்கேற்று வந்தனர்.அதே நேரத்தில், இஸ்ரேல் மீதான தாக்குதலை பாலஸ்தீனமும், அதன் ஆதரவு பெற்ற ஹமாஸ் பயங்கரவாதிகளும் நிறுத்தாததால், பேச்சில் கலந்து கொள்ள, நேற்று மாலை வரை இஸ்ரேல் முன்வரவில்லை.

இஸ்ரேல் மீது காசா பகுதியிலிருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்படுகின்றன. அதற்கு பதிலடியாக, இஸ்ரேலும், நூறு குண்டுகளை விமானம் மூலம் வீசியது; எனினும், இருதரப்பிலும் புதிதாக உயிர் பலி இல்லை.இதுவரை நடைபெற்ற தாக்குதலில், 2,000 பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் கொல்லப்
பட்டுள்ளனர்.