பிரான்ஸ் நாட்டிலிருந்து உணவு பொருட்கள் இறக்குமதியை ரஷ்யா தடை செய்ததால் பிரான்ஸ் விவசாயிகள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர்.
90 சதவீத ஆப்பிள் மற்றும் பியர்ஸை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் பிரான்ஸ் நாட்டின் பிரபல உணவு ஏற்றுமதியாளாரான ஜீன் செல்வெரோ, ரஷ்யா விதிக்கப்பட்ட தடையால் மாதத்திற்கு 200 ஆயிரம் பவுண்ட்ஸ் நஷ்டம் ஏற்பட போவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள இந்நிலை பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மட்டுமின்றி மற்ற உணவு பொருட்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரான்ஸின் விவசாய அமைச்சகத்தின் தலைவர் சேவியர் பெலின் கூறுகையில், பிரான்ஸில் பழ மற்றும் காய்கறி நிறுவனம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் ஏற்றுமதி விகிதம் ஆண்டிற்கு 10 சதவிகிதம் உயர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸின் உணவு தயாரிப்பாளர் ஜீன் கூறுகையில், இது அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி என்றும், தனது ஊழியர்களுக்கு இன்று அல்லது நாளை தமது நிறுவனம் முடிவுக்க வரபோவதாக தெரிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.