மலையில் யாஸிடி இன மக்கள் வெளியேற்ற அமெரிக்கா முடிவு

yasithi_people_001ஹோனியரா:ஈராக்கின் வடக்கு பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பயந்து, சிஞ்ஜார் மலையில் தஞ்சம் புகுந்துள்ள, 20 ஆயிரம், யாஸிடி சிறுபான்மையின மக்களை எவ்வாறு அங்கிருந்து வெளியே கொண்டு செல்வது என்பது குறித்து, அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது,” என, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், கடந்த ஜூனில், மொசூல் நகரை கைப்பற்றிய, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிறுபான்மையினத்தவரான யாஸிடி, கிறிஸ்தவர்கள், துர்க், ஷாபாக் ஆகியோரை கொன்று குவித்து வருகின்றனர்.

சின்ஜார் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் யாஸிடி மக்கள் மீதான தாக்குதலை, பயங்கரவாதிகள் அதிகரித்ததால், அங்குள்ள மலைகளில், அந்த மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு, அமெரிக்க ஹெலிகாப்டர்கள், உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை வீசி வருகின்றன.

அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில், சாலமன் தீவுகள் நாட்டின் தலைநகர், ஹோனியராவில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், ஜான் கெர்ரி, ”மலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, எவ்வாறு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அப்புறப்படுத்துவது என்பது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது,” என தெரிவித்தார்.இதற்கிடையே, யாஸிடி சிறுபான்மையின மக்களுக்கு உதவி செய்வதற்காக, ஈராக்கிற்கு, கூடுதலாக, 130 வீரர்களை அமெரிக்கா நேற்று அனுப்பி வைத்துள்ளது.