அமெரிக்காவின் மிசூரி மாகாணத்திலுள்ள ஃபெர்குஸன் நகரில் 18 வயது கருப்பின இளைஞர் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்நகரில் ஏற்பட்ட கலவரம், ஒரு வாரத்தைத் தாண்டி திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
பல இடங்களில், சூறையாடல், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தொடர்ந்து, அந்நகருக்கு தேசிய காவல்படை வரவழைக்கப்பட்டது.
கொல்லப்பட்ட மைக்கேல் பிரெளன் என்ற அந்த இளைஞர், எந்தவித ஆயுதத்தையும் வைத்திருக்காத நிலையில், காவல்துறை அதிகாரி அவரை சுட்டது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரெüன் 6 முறை சுடப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.