லண்டனில் பிரமாண்ட இந்து கோவில் திறப்பு

temple_2194886bலண்டன் : சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதத்தில், பசுமை தன்மைகளுடன், உலகின் முதல் இந்து கோவில், லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், சுவாமி நாராயண் மந்திர் அமைப்பின் சார்பில், 160 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, சுவாமி நாராயண் கோவில், இந்திய கட்டடக் கலை அம்சங்களுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்தும், மாசு ஏற்படுத்தாத விதத்தில், சூரிய மின் ஒளி திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் போன்ற, புதுமையான முறைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை, சுவாமி நாராயண் மந்திர் அமைப்பின் தலைவர், ஆச்சார்ய சுவாமிஸ்ரீ மகராஜ் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, லண்டன் நகர மேயர், போரிஸ் ஜான்சன், ”சமீபத்தில் நான் பார்த்த இடங்களிலேயே, இந்தக் கோவில் தான், என்னை மிகவும் ஈர்த்தது,” என்றார்.