அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிலிப் ஹேமன்ட்(Philip Hammond) கூறியதாவது, ஐரோப்பாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே (James Foley) கொடூரமாக தலைதுண்டிக்கப்பட்ட காணொளியில் இருந்த தீவிரவாதி இங்கிலாந்து உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் பேசுவது தெளிவாகத் தெரிகிறது.
இதன்மூலம் சிறிதும் ஈவு இரக்கமற்ற மிகக் கொடுமையான இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது புலப்படுகிறது.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள இங்கிலாந்து நாட்டவரால், தற்போது எங்களது நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இப்படிப்பட்ட குரூரமான இயக்கத்தினரிடமிருந்து ஈராக், சிரியாவைக் காப்பாற்ற உலக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியை இங்கிலாந்து தீவிரப்படுத்தும் என கூறியுள்ளார்
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிரியாவுக்கு 400 இங்கிலாந்து நாட்டவர் போயிருக்கலாம் என்று கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
-http://world.lankasri.com