சிட்னி : ”ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கொடூர செயல்கள், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க, உலகம் முழுவதும் ஒன்றிணைய வேண்டும்,” என, உலகில் அதிக முஸ்லிம்கள் வசிக்கும், இந்தோனேசியா நாட்டின் அதிபர், சுசிலோ பாம்பாங் யுதோயோனோ கூறினார். ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் செயல், மிகவும் கொடூரமாக உள்ளது; கட்டுக்கடங்காமல் உள்ள அவர்களால், உலக முஸ்லிம்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். அந்த பயங்கரவாதிகளை, நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. உலகில், அதிக முஸ்லிம்கள் இந்தோனேசியாவில் வசித்தாலும், எங்கள் நாடு இஸ்லாமிய நாடு அல்ல. எனினும், எங்கள் நாடுகளைச் சேர்ந்த சிலர், பயங்கரவாதிகளுடன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலை அளிக்கின்றன. இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க, உலக நாடுகளும், உலக தலைவர் களும் ஒன்றிணைய வேண்டும்.
இந்தோனேசியாவில், ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளை வளர விட மாட்டோம்.
இவ்வாறு, அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ கூறினார்.
உலகில், அதிக முஸ்லிம்கள் இந்தோனேசியாவில் வசித்தாலும், எங்கள் நாடு இஸ்லாமிய நாடு அல்ல என்று கூறும் அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் … என்ன ஒரு பெருந்தன்மை… பல பேர் இந்தோனேசியாவிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும்.
உங்கள் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆட்சியின் கீழ் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகம் வளர்ந்துள்ளது. மறுக்க முடியாத உண்மை. நீங்கள் எதுவும் கண்டுகொள்ளாமல் போல் இருந்தது அதன் துரித வளர்ச்சிக்கு மிகவும் உந்துதலாக இருந்தது. எங்க நாட்டுத் தலைவர்களும் அப்படிதான். வெளிநாட்டு தகவல் சாதனங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது மட்டும் புண்ணியசீலர்கள் போல் பேசுவார்கள். உள்நாட்டுத் தீவிரவாதத்தை கண்டும் காணாமல் இருப்பார்கள். வேடதாரிகள்.
உண்மையே,வாழ்க நாராயண நாமம்.
உலகில், அதிக முஸ்லிம்கள் இந்தோனேசியாவில் வசித்தாலும், எங்கள் நாடு இஸ்லாமிய நாடு அல்ல ” அருமையாக சொன்னீர்கள்.