மசூதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் – 70 பேர் சுட்டுக்கொலை

iraq_security_forces_001ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் மசூதி மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள சன்னி பிரிவு ஆதரவு தீவிரவாதிகள் கைப்பற்றிய தியாலா உள்ளிட்டப் பகுதிகளை மீட்கும் முயற்சியில், ஷியா பிரிவு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தியாலாவில் மசூதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

“தியாலா மாகாணம், ஹம்ரீன் பகுதியில் நிகழ்ந்த மோதலில் ஷியா பிரிவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்குள்ள, சன்னி பிரிவினருக்குச் சொந்தமான முசாப் பின் ஓமர் மசூதியில் நுழைந்து ஷியா பிரிவு தீவிரவாதிகள் இயந்திரத் துப்பாக்கி மூலம் கண்மூடித்தனமாக சுட்டதுடன், சாலையோரம் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில், மருத்துவர்கள், அதிகாரிகள், தொழுகைக்கு வந்தவர்கள் என 70 பேர் அதே இடத்தில் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்” என்றார்.

ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது.

சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வகையில், ஒடுக்கப்படும் பிரிவினர் தகுந்த நேரம் பார்த்து ஆதிக்கவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி நிலைகுலையச் செய்கின்றனர். இத்தகைய வன்முறை தாக்குதல்களில் இருதரப்பிலும் இது வரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

ஈராக்கில் சுமார் 60 சதவீதம் ஷியா பிரிவினரும், 30 சதவீதம் சன்னி பிரிவினரும், 10 சதவீதம் குர்த் இன மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்களும் பெரும்பான்மை இனமான ஷியா பிரிவனர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. -http://world.lankasri.com

Iraq mosque massacre: 65 dead

Baghdad, Iraq (CNN) — Suspected Shiite militiamen opened fire Friday inside a Sunni mosque in northeast Iraq, killing dozens in an attack that appeared to derail the formation of a new government — something world leaders have said is a must if the country hopes to defeat Islamic militants.

The news of the attack that left 65 people dead came as Iraqi forces — in some cases boosted by U.S. airstrikes — touted successes in the fight to push back the extremist Sunni Muslim militant group, which calls itself the Islamic State. Militants control large swaths of northern Iraq and eastern Syria.

The attack in the Musab bin Omar Mosque in the village of Bani Weis in Diyala province, about 75 kilometers northeast of Baquba, also left at least 17 people wounded, officials said.

Sunni lawmakers withdrew from negotiations to form a new government, saying they would not return until those behind the attack were arrested, two party officials told CNN.

Iraqi authorities did not immediately identify the attackers, but Sunni politicians have put the blame on Shiite militias.

Calling it the latest in a series of attacks by militiamen aligned with Iraqi security forces in the fight against ISIS, Deputy Prime Minister Saleh al-Mutlaq — a Sunni — said the government must conduct an investigation and hold accountable those behind the attack.

“We want serious action,” he told CNN.

By Jomana Karadsheh, Jason Hanna and Chelsea J. Carter, CNN
August 22, 2014 — Updated 2223 GMT (0623 HKT)