லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா பகுதி போராளிகள் அறிவித்துள்ளனர்.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முவம்மர் கடாபி கொல்லப்பட்ட பிறகு தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற இஸ்லாமிய போராளி குழுக்கள் தீவிரம் காட்டி வந்தன.
இதனால் அந்நாட்டு தேசிய படைக்கும், போராளி குழுக்களுக்குமிடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இதனையடுத்து, கடந்த ஜூலை 13ம் திகதி திரிபோலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, மட்டிகா விமான நிலையத்தின் மூலம் விமானப் போக்குவரத்து தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், திரிபோலி சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா நகரை சேர்ந்த போராளிக் குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.
விமான நிலைய கட்டிடம் மற்றும் விமானங்களின் மீது இந்தக் குழுவினர் தங்களது கொடியுடன் ஏறி நிற்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
விமான நிலையத்தையடுத்து, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் திரிபோலியையும் அவர்கள் கைப்பற்றி விடக்கூடும் என்ற கருத்து அங்கு நிலவி வருகின்றது.