சீனாவில் எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

china_attack_001சீனாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டுப்  பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவின் க்ஸிங்ஜியாங் மாகானத்தை சேர்ந்த எட்டு தீவிரவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குண்டுகள் நிரப்பிய காரை மோதி தாக்குதல் நடத்த மூளையாக இருந்து திட்டமிட்ட தீவிரவாதிகள் மற்றும் சீனாவின் பல்வேறு ரெயில் நிலையங்களில் அப்பாவி மக்களை வெட்டி கொலை செய்தவர்களுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

க்ஸிங்ஜியாங் மாகானத்தை சேர்ந்த உரும்கி இன மக்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தனிநாடு அமைக்கும் கோரிக்கையுடன் ஆயுதமேந்திய தீவிரவாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் அரசிடம் பிடிபடும் நபர்களுக்கு சீனாவின் கம்யூனிச ஆட்சி பெரும்பாலும் மரண தண்டனை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.