அனைத்துக் குறிக்கோள்களும் நிறைவேறும் வரை காஸா பகுதி மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறினார்.
இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது நெதன்யாஹு கூறியது: இஸ்ரேல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை, அதன் குறிக்கோள்கள் அடையும் வரை தொடரும்.
நமது எதிரிகள் நம்மை சோர்வடையச் செய்ய முடியாது. பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய தேசமும் (ஐ.எஸ்.) ஹமாஸýம் ஒன்றே. தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையே கொல்லவும் சிறார்களைக் கொல்லவும் அவர்கள் தயங்குவதில்லை. இவர்களின் உண்மையான சொரூபத்தை உலகம் அறிந்து கொண்டுள்ளது என்று அவர் கூறினார். -http://www.dinamani.com/world