பாகிஸ்தானின் கைபர் பகுதியில் தெஹ்ரிக்-ஏ-தலிபான் தளபதி ஒருவர் வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரது இல்லத்துக்கு வெளியே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அதே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், நேட்டோ லாரி ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் அதன் ஓட்டுநரும், உதவிப் பணியாளரும் உயிரிழந்தனர்.