ஐ.எஸ். எதிர்ப்பு: அஸாதுடன் கைகோக்க பிரான்ஸ் மறுப்பு

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியா அதிபர் அல்-அஸாதுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என பிரான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்சுவா ஹொலாந்த் வியாழக்கிழமை கூறுகையில், “”சிரியா அதிபர் அல் அஸாத், மத அடிப்படைவாதிகளின் கூட்டாளி.

சிரியாவிலும், இராக்கிலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை, மனிதநேயத்துடன் கூடிய ராணுவ பலத்துடன் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், அஸாத் ஒருபோதும் கூட்டாளியாக முடியாது” என்றார். -http://www.dinamani.com/world

250 சிரிய இராணுவ வீரர்களை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்?

syria_soldiers_kills_001சிரிய நாட்டைச் சேர்ந்த 250 இராணுவ வீரர்களை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது.

ஹமாஸ் மாகாணத்திலிருந்து வெளியேற எத்தனித்த வேலையில் சிரிய ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

syriaசிரிய இராணுவத்தினரை படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது டுவிட்டர் தளத்தில் சேர்த்துள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் உள்ளாடைகளுடன் துப்பாக்கி முனையில் இருப்பது காணொளிகளில் காட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிரிய கண்காணிப்பக நிலையத்தின் தகவலின் படி 346 தீவிரவாதிகளும், 170 க்கு மேற்பட்ட பாதுகாப்பு படைத்தரப்பினரும் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை. 43 ஐக்கிய நாடுகளுக்கான அமைதிகாக்கும் படைத்தரப்பினர் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். -http://world.lankasri.com