மலேசியா, உண்மையான சுதந்திரம், வளப்பம், நல்லிணக்கம் ஆகியவற்றை அடைந்து விட்டதாக மெர்டேகா விளம்பரங்களில் காட்டப்படுவது வெறும் மாயை என்று கூறும் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அவற்றை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றார்.
“அந்த விளம்பரங்கள் மலேசியர் வாழ்க்கையைப் பற்றி ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் காட்டுகின்றன. உண்மையில் இன, சமய, கலாச்சார வேறுபாடுகளினால் அச்சமும் சகிப்புத்தன்மையற்ற ஒரு சூழலும்தான் நிலவுகிறது.
“57 ஆண்டுகளுக்குப் பின்னரும், இனம், சமயம், அரசியல்சார்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியாமல் மலேசியா தடுமாறிக் கொண்டிருக்கிறது”, என லிம் கூறினார்.
அது தான் விளம்பரம் ஆயிற்றே! அதிலே மாயா ஜாலங்களைத்தானே பார்க்க முடியும்!
விளம்பரம்; இன்றைய நடப்புக்களை காட்டும் வகையில்
வந்தால், சத்து மலேசிய நகைப்புக் குரியதாகிவிடும் !!!
பக்கத்துக்கு வீட்டுக் காரன் பட்டினியால் வாட ,இன்னொரு
இனம் சகல சுகத்தோடும் சந்தோசமாக வாழும் நிலை தான்
சுதந்திர நாட்டின் ஒருமைப்பாடா ???
ஒரு கூஜா தூக்கி பத்திரிக்கையாளன் எழுதுகிறான் …,
அந்த இனம் இன்னும் முன்னுக்கு வரவில்லையாம் ???
செய்தித் துறையில் உள்ளவர்கள் வேண்டுமானால் (கூழுக்கு
பாடிகள் ) போற்றி…, போற்றி …,எழுதலாம் !
ஆனால் நடைமுறையில் நம் இனம் இன்னும் தன்காலில் நிற்ப்பதையும்…,
தடுக்கி விழச் செய்ய பலர் இருக்கிறார்கள்!!!
100வது மெர்டெக்கா விழாவில் கூட நாம் ஒற்றுமை பற்றிதான் பேசுவோம். அரசியல் சட்டம் 153 இருக்கும் வரை ஒற்றுமைக்கு வழியே இல்லை. கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்பு போன்ற வற்றில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் வாய்ப்பு இல்லாத வரை???????
இவர் சொல்வதெல்லாம் உண்மை, உண்மாவ்யை தவிர வேறொன்றும் இல்லை.
விளம்பரங்கள் தானே! விட்டு விடுவோம். இப்போது காமடி காட்சிகள் கொண்ட நிகழ்ச்சிகள் குறைந்துள்ளன. இதையாவது பார்த்து புரிந்து சிரிப்போமே!!!
அறுபது, எழுபதாம் ஆண்டுகளில் இருந்த ஒற்றுமையுணர்வு இப்போது இல்லை. நான் இடைநிலை பள்ளியில் படித்தபோது தூடோங் அணிந்த ஒரே மலாய் பெண் உஸ்தாசாஹ் மட்டுமே. ஆசிரியர்களின் கண்டிப்பு அதிகமிருந்தாலும் மாணவர்களை மதத்தையோ இனத்தையோ கூறி கேலி செய்ததில்லை. செருப்பால் அடித்ததில்லை. உடற்பயிற்ச்சி நேரத்தின்போது அனைத்து மாணவமாணவியரும் அரைக்கால் சிலுவாரும் T சட்டையும் அணிந்து எவ்வித விகற்பமுமின்றி பயிற்சியில் ஈடுபடுவோம் . பள்ளி இடைவேளையின்போது, வீட்டிலிருந்து கொணர்ந்த சிற்றூண்டியை சக இன நண்பர்களுடன் பகிர்ந்து உண்போம்,மகிழ்ச்சியாய் அரட்டையடிப்போம். வெள்ளம் போன்ற இடர்களின்போது இனபேதம் பாராது ஓடி உதவுவோம். பெருனாட்களின்போது, அவ்விழாவை கொண்டாடும் இன நண்பர்களின் வீடுகளுக்கு கூட்டமாய் படையெடுப்போம். வேற்று இனத்தவரை, மதத்தவரை மதிக்க தெரிந்து இருந்தோம். என் பிள்ளைகளிடம் இதை கூறினால் வாய்பிளந்து வியக்கிறார்கள். இது உண்மையா என்று ஐயுருகிறார்கள். அக்காலகட்டத்தில் சமுதாய சீரழியுகளை இப்போதுபோன்று கேள்விப்பட்டதில்லை. என் எண்ணத்தில் உண்மையான ‘சத்து’ மலேசியா அப்போது இருந்தது. மலேசிய வரலாற்றில் அது ஒரு வசந்த காலம் அக்காலம் இனி மீளுமா என்பது ஐயமே. திரு லிம் கிட் சியாங் சொல்வதுபோல் சத்து மலேசியா ஒரு மாயை. இப்போது சைபுல் மலேசியா!
அடயென்ன சாரே,இதை கூற ஒரு ரௌடி கும்பலா,இரவு 11.45,எல்லோறும் மெர்டேக்கா கொண்டாடிட்டு இருக்கையில் லிம் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுளது,இவன்கள் யார் விம்ச்சனத்தை எதிர்க,அரசாங்கமே பதில் சொல்லவேண்டும்.கேட்ககூடாதென்றால் எப்படி ?, ஆதலால் கூறியிறுப்பார் நாடு இன்னும் சுதந்திரம் பெறவில்லையென்று,ஆமாம்தானே,.இந்நடவடிக்கை நஜிப்பை எதிர்க்கவே.நாராயண நாராயண.
விக்க முடியாத பொருளுக்குதான் விளம்பரம் தேவை !
அதிலே நம்ம …படம் போல தெரிகிறதே
லிம் வீட்டு தாக்குதல் pps தீவிரவாத செயலாக இருக்குமோ..பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிறான் லிம்
..
உண்மையில், பக்தியில், கல்வியில், கலை துறையில், அரசியலில், இன்னும் என்ன துறைகள் உண்டோ, அவற்றில் ஒருவர் தீவிரமாக இருந்தால், அவர் தீவிரவாதியே ! இதில் அலவிட முடியாது !
shanthi என்ற ………………………….