ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது சவுதி மன்னர் அப்துல்லா இதுகுறித்து கூறியதாவது, நாம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை புறக்கணித்தால், அவர்கள் அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு குறி வைப்பார்கள்.
அதற்கு அடுத்து மாதம் அமெரிக்கா மீது இலக்கு வைப்பார்கள். தீவிரவாததிற்கு எல்லைகள் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேயும் செல்லலாம்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்க முடியாத பின்விளைவுகளை சந்திக்க நேரலாம்.மேலும தலையை வெட்டி படுகொலை செய்யும் அவர்களது கொடூர குணம், மிகுந்த கண்டிப்பிற்குரியது.
இது புதியதோர் செய்தி இல்லை, அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டனர். இனி செய்வதற்கு ஏதும் இல்லை. இதனை அனைத்து தலைவர்களும் ஏற்று, தீவிரவாததிற்கு எதிரான வேகமான உரிய நடவடிக்கைகளை தகுந்த சமயத்தில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். -http://world.lankasri.com