பிராந்திய நாடுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை பரிசோதித்துள்ளது.
குறுந்தூர ஏவுகணை ஒன்றே இவ்வாறு பரிசோதிக்கப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் குறித்த குறுந்தூர ஏவுகணை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
60 கிலோ மீற்றர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடிய வகையில் குறித்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு தென்கொரியா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
மேலும் வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனையை நிறுத்தவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.