அமெரிக்காவின் தலையீடு – உக்ரேன் கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர போர் நிறுத்தம்

Ethnolingusitic_map_of_ukraineஉக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுடன் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உக்ரேன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பேர்சென்கோ குறிப்பிட்டுள்ளார்.

சமாதானத்தை ஏற்படுத்துதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் இரண்டு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர புரிந்துணர்வை எட்டியுள்ளனர்.

இதேவேளை, ரஷ்யா – உக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நெருக்கடிகள் பற்றி எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பேச்சுவார்தை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னணில் உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர யுத்த நிறுத்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளாகும். இந்த நாடுகள் 2004ஆம் ஆண்டு நேட்டோவில் இணைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.