இரண்டாவது குழந்தை பெற 20 ஆயிரம் பேருக்கு அனுமதி

china_flag_001பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடான சீனாவில், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரிசு’ கொள்கை பின்பற்றப்படுகிறது. இதனால், அந்நாட்டின் மக்கள் தொகை சற்றே குறைந்துள்ள போதிலும், பல இடங்களில், இளைஞர்களே இல்லை; பெரியவர்கள் தான் இருக்கின்றனர்.

இளைஞர்களில் பெண்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.இதையடுத்து, கடந்த ஆண்டு முதல், ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை திட்டத்தை சற்றே தளர்த்த முன்வந்த சீன கம்யூனிஸ்ட் அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பதியருக்கு, இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கி வருகிறது.

அந்த வகையில், பீஜிங் முனிசிபல் எல்லையில், 21 ஆயிரம் பேர், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்ததில், 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், 56 சதவீதம் பேர், 31 35 வயதினர். மீதம் உள்ளவர்கள், 40 வயதை தாண்டியவர்கள்.