ஐ.எஸ். பயங்கரவாத எதிர்ப்பில் அமெரிக்காவுக்கு முனைப்பு போதாது: ஈரான் குற்றச்சாட்டு

isis-genocideஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்காவுக்குப் போதிய முனைப்பு இல்லை என்று ஈரான் குறை கூறியது.

இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஜரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

இராக், சிரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து இன்னும் முழுமையாக அமெரிக்கா தெரிந்து கொள்ளவில்லை. அவர்களை எதிர்ப்பதில் போதிய முனைப்பை இன்னும் காட்டவில்லை. சிரியாவில் ஐ.எஸ்.ஸýக்கு பல வழிகளில் அமெரிக்கா உதவியுள்ளது.

மேற்கு ஆசிய பகுதி முழுவதையும் மிரட்டும் ஐ.எஸ்.ûஸ எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு தேவை. அவர்களின் isis_leader_001அச்சுறுத்தலை ஆரம்பத்திலிருந்தே ஈரான் அறிந்துள்ளது. அவர்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக, இராக்கில் உள்ள ஷியா, சன்னி, குர்து என அனைத்துப் பிரிவினருக்கும் உதவிபுரிந்துள்ளோம் என்று அவர் கூறினார்.

2011-ஆம் ஆண்டு முதல் சிரியாவில் பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அப்போதிலிருந்தே ஈரான் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அஸாத் எதிர்ப்பு, உள்நாட்டுப் போராக மாறி, இப்போது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு வழிகோலியுள்ளது.

ஈரானுடன் ஒத்துழைக்கத் தயார் எனவும் ஆனால், நேரடி நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அண்மையில் கூறியுள்ளது.