மூன்று மாதங்களுக்கு முன்பு டிஎபி அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹோக்கின் மரணம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் அம்மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்த எம்எசிசியின் மூவருக்கு எதிராக போலீஸ் புகாரோ, விசாரணையோ செய்யப்படவில்லை.
போலீஸ் புகார் செய்யப்படாததுதான் அதற்குக் காரணம் என்று பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் கூறினார். எவருக்கும் எதிராக குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு விசாரணை மூலமான சாட்சியம் அல்லது நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலம் கிடையாது.
ஆனால், தியோ மர்மான முறையில் விழுந்து இறந்துபோனது சம்பந்தமாக அரச ஆணையத்தின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அந்த மூன்று அதிகாரிகளும் அந்த அமைப்பின் உள்விசாரணை குழுவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று நஸ்ரி மேலும் கூறினார்.