ஏஜியின் 2010 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை தாக்கல் செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பதற்கு பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கேட்டுக்கொண்டார்.
புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங் இத்தாமதம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற எதிரணியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். “இது நல்ல செய்தியை குறையுடைய செய்திகள் என்று கூறப்படுபவைகளிலிருந்து வேறுபடுத்தி அவற்றை விவாதிப்பதிலிருந்து எம்பிகளை தடுப்பதாகும்”, என்றாரவர்.
கடந்த வாரம் ஆடிட்டர் ஜெனரல் அம்பிரின் புவாங் 1982 ஆம் ஆண்டிலிருந்து அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவையிடம் வழங்குவது வழக்கமானதாக இருந்து வருகிறது என்று கூறினார்.
“நாங்கள் அந்த வழக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. அந்த அறிக்கையை எப்போது தாக்கல் செய்வது என்பதற்கான பொறுப்பு அமைச்சரவை சேர்ந்தது என்று நான் நினைக்கிறேன்”, என்று அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.
“அது ஏன் கொள்கை விவாதம் முடிவுற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட்டது என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்”, என்று லியு கூறினார்.