அமைச்சர் குடும்பத்துக்கு விடுமுறை சுற்றுலாவுக்கு என்எப்சி 800,000 ரிங்கிட்டை செலவு…

என்எப்சி என்ற சர்ச்சைக்குரிய தேசிய விலங்குக் கூட நிர்வாகக் கழகத்தின் பங்குதாரர்களும் வாரிய உறுப்பினர்களும் கூட்டரசு அமைச்சர் ஒருவருடைய கணவரும் குழந்தைகளும்  அந்த நிறுவன நிதியில் அதிகம் செலவு பிடித்த வெளிநாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டனர். அந்தச் சுற்றுலாவுக்காக 800,000 ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்யப்பட்டதை அந்த நிறுவனத்தின் தணிக்கை…

கணக்கறிக்கை பிஎன் அரசுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு “சிவப்பு” அட்டை

தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை பள்ளியில் மாணவர்களுக்குக்  கொடுக்கப்படும் தேர்ச்சி அறிக்கை போன்றது என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். ஆனால், இந்த அறிக்கையில் சிவப்பு மையால் எழுதப்பட்ட குறிப்புகளும் குறைந்த மதிப்பெண்களும்தாம் நிறைய உள்ளன என்றும் அது, பிஎன் அரசின் தோல்வி பற்றிக் கதைகதையாகக் கூறுகிறது என்றும்…

முஹைடின் விலங்குக் கூடத் திட்டம் மீது மௌனம் சாதிக்கிறார்

தேசிய விலங்குக் கூடத் திட்டம் மீது 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் "வழக்கத்திற்கு மாறானவை அல்ல" என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். "அதில் வழக்கத்துக்கு மாறான விஷயமோ அல்லது தவறு ஏதும் நிகழ்ந்திருப்பதாகவோ நான் எண்ணவில்லை. ஆனால் கணக்காய்வு பலவீனங்களைக்…

மூன்று திரங்கானு மாவட்டங்கள் பள்ளிக்கூட சீருடைகளை விநியோகம் செய்யவில்லை

2010ம் ஆண்டு நிர்வாகக் கோளாறு காரணமாக திரங்கானுவில் மூன்று மாவட்டங்கள், பள்ளிக்கூடச் சீருடைகளையும் புத்தகப் பைகளையும் விநியோகம் செய்யவில்லை என்பதை தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கண்டு பிடித்துள்ளது. மாராங், டுங்குன், செத்தியூ ஆகியவை அந்த மூன்று மாவட்டங்களாகும். அந்த மாநிலத்தில் உள்ள மற்ற நான்கு மாவட்டங்களிலும் 53,000 ஜோடி…

“தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அமைச்சரவைக்கு செல்ல வேண்டியதில்லை”

அரசியலமைப்பு வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி, தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் அமைச்சரவை சம்பந்தப்பட்டுள்ளது தவறு என்கிறார்.  ஏனெனில் அது அரசியலமைப்பு உணர்வுக்கு எதிரானதாகும். கூட்டரசு அரசியலமைப்பின் 107வது பிரிவின் கீழ் அந்த அறிக்கையை தலைமைக் கணக்காய்வாளர் தயாரிக்க வேண்டும். மக்களவையில் சமர்பிக்கப்படுவதற்காக அது மாமன்னரிடம் சமர்பிக்கப்பட வேண்டும் என…

முற்றுப்பெறாத ரிம214 மில்லியன் இராணுவ முகாம் நொருங்கி விழுந்து கொண்டிருக்கிறது

கடந்த ஆண்டு பெப்ரவரில் கட்டி முடிக்கப்பட வேண்டிய சரவாக் முவாரா துவாங் இராணுவ முகாம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதோடு பல்வேறு பாகங்கள் நொருங்கி விழுந்து கொண்டிருக்கின்றன. அந்த முகாம் கட்டி முடிக்க வேண்டியதற்கான கால எல்லை மூன்று முறை நீட்டிக்கப்பட்டும் அந்த ரிம214.43 மில்லியன் திட்டம் 95.7 விழுக்காடுதான்…

என்எப்சி தோல்வி குறித்து “அம்பலப்படுத்தப் போவதாக” பிகேஆர் மருட்டுகிறது

என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட மையத் திட்டம் மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது மீது தெளிவான பதில்கள் கிடைக்கா விட்டால் அந்தத் திட்டம் குறித்துக் கவனம் செலுத்தப் போவதாக பிகேஆர் மருட்டியுள்ளது. அந்தத் திட்டம் "ஒரே குழப்பத்தில்" மூழ்கியிருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வருணித்துள்ளது. நெகிரி செம்பிலான்…

ஏஜி அறிக்கை: ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு கொடுக்க ரிம770,000

தெனாகா நேசனல் பெர்ஹாட், அதன் கிராமப்புற மின்னளிப்புத் திட்ட (பிஇஎல்பி) த்தின் கீழ் ஒரே ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்க ரிம770,000 செலவிட்டிருக்கிறது. பகாங், இந்த்ரா மக்கோத்தாவில் 17 வீடுகளுக்கு மின்விநியோகம் அளிக்கத்தான் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தால் ஒரே ஒரு வீடுதான்…

ஏஜி அறிக்கை: பென்சன் பிரிவு ரிம4.6மில்லியனை அதிகப்படியாகக் கொடுத்துள்ளது

2007-க்கும் 2010-க்குமிடையே, பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஓய்வூதியமாக ரிம4.6மில்லியன் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருப்பதைத் தலைமைக் கணக்காய்வாளர்துறை கண்டுபிடித்துள்ளது. இத்தொகையில் ரிம2.57 மில்லியன், இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் 1975 பேரின் குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் திரும்பப்பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதுவரை ரிம850,000 திரும்பப் பெறப்பட்டுள்ளது. எஞ்சி…

ஏஜி அறிக்கை 2010: என்எஸ்சியின் நிதியில் குதிரை விளையாட்டு

குதிரை ஏற்றம் மற்றும் தாங்கும் திண்மை ஆகியவற்றின் போட்டியில் பங்கேற்பதற்காக தனிப்பட்ட முறையில் வளர்க்கப்பட்ட மிகச் சிறந்த 23 குதிரைகளை தேசிய விளையாட்டு மன்றம் வாங்கியது. அதில் 18 குதிரைகள் அனைத்துலக குதிரை ஏற்றம் சம்மேளனம் வரையறுத்துள்ள தகுதிகளைப் பெறத் தவறிவிட்டது. ரிம3.94 மில்லியன் விலை மதிப்புள்ள இக்குதிரைகள்…

பொதுக் கணக்குக் குழு ஏழு அமைச்சுக்களையும் துறைகளையும் விசாரிக்கும்

பொதுக் கணக்குக் குழு ஏழு அமைச்சுக்களையும் துறைகளையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வுத்துறையின் அறிக்கையை மூன்று மணி நேரத்திற்கு மேல் இன்று அந்தக் குழு பரிசீலித்த பின்னர் அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, எரிசக்தி பசுமைத் தொழில்நுட்ப நீர் வள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு,…

ஏஜியின் அறிக்கையைத் தாக்கல் செய்வதில் ஏன் தாமதம்?

ஏஜியின் 2010 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை தாக்கல் செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பதற்கு பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கேட்டுக்கொண்டார். புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங் இத்தாமதம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற எதிரணியின் நிலைப்பாட்டை…

ஏஜி அறிக்கை: “பைனாகுலர் விலைகள் 29 மடங்கு உயர்வு”

மலேசிய கடல் பூங்காத் துறை, இரவு நேரத்தில் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு கடல் துறை பைனாகுலர்களை கொள்முதல் செய்வதற்கு அதன் சந்தை மதிப்பான 1,940 ரிங்கிட்டை விட 28 மடங்கிற்கு மேல் அதாவது 56,350 ரிங்கிட்டைச் செலவு செய்துள்ளது. அதே வேளையில் இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு புஷ்னெல்…

ஏஜி கணக்கறிக்கை(2): கழிப்பறையா உணவுச் சேமிப்பு அறையா?

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு கெமாஸ் பாலர் பள்ளியில் ஒரு கழிப்பறை உலர்ந்த உணவைச் சேமித்து  வைக்கப்படும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதாரம் முறையாக பேணப்படாததற்கு இது ஓர் எடுத்துக்காட்டு எனத் தலைமைக் கணக்காய்வாளர் 2010 கணக்கறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். “உலர்ந்த உணவுப்பொருள்கள் நீண்ட காலத்துக்கு, காலாவதி தேதிக்குப் பின்னரும்கூட…

ஏஜி 2010 அறிக்கை (1): மாராவின் களவாடித்தனம்

மிகுந்த வறிய நிலையிலுள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரிம54 மில்லியன் நிதியை முற்றிலும் அவர்களுக்காகப் பயன்படுத்தாமல், வாங்கிய பொருள்களுக்கு சந்தை விலையை விட 100 க்கும் அதிகமான விகித விலையைக் கொடுத்து மாரா வாங்கியுள்ளது. இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வர் (ஏஜி)…