குதிரை ஏற்றம் மற்றும் தாங்கும் திண்மை ஆகியவற்றின் போட்டியில் பங்கேற்பதற்காக தனிப்பட்ட முறையில் வளர்க்கப்பட்ட மிகச் சிறந்த 23 குதிரைகளை தேசிய விளையாட்டு மன்றம் வாங்கியது. அதில் 18 குதிரைகள் அனைத்துலக குதிரை ஏற்றம் சம்மேளனம் வரையறுத்துள்ள தகுதிகளைப் பெறத் தவறிவிட்டது.
ரிம3.94 மில்லியன் விலை மதிப்புள்ள இக்குதிரைகள் காயமடைந்திருந்ததால் நிராகரிக்கப்பட்டன.
மீதமுள்ள ஐந்து குதிரைகள் ஏற்றதாக இருந்ததால் அவை உலக தாங்கும் திண்மை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன.
நிதி அமைச்சின் ஒப்புதல் இன்றி நேரடி பேச்சுவார்த்தையின் வழி 2008 ஆண்டில் வாங்கப்பட்ட அந்த 23 குதிரைகளின் விலை ரிம5.66 மில்லியன் என்று ஏஜியின் 2010 ஆம் ஆண்டுக்கான அறிக்கை கூறுகிறது.
இக்குதிரைகள் கீழ்க்கண்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டன:
1. எக்குவின் செண்டர் செண்ட் பெர்ஹாட் – 6 குதிரைகள், விலை ரிம1.98 மில்லியன்.
2. எல் ராஞ்சோ கண்ட்ரி கிளப் – 13 குதிரைகள், விலை ரிம2.48 மில்லியன்.
3.ரோயல் டிரங்கானு எண்டியுரென்ஸ் ஸ்டேபில் – 2 குதிரைகள், விலை ரிம0.58 மில்லியன்.
4. டோப் எண்டியுரென்ஸ் பிரைவேட் லிமிடெட் – 2 குதிரைகள், விலை ரிம0.62 மில்லியன்.
அந்த 23 குதிரைகளும் அப்போதிலிருந்து கீழ்க்கண்ட அரசாங்க அமைப்புகளுக்கு “ஒதுக்கிக்கொடுக்கப்பட்டுள்ளன”:
– போலீஸ் குதிரைப் பிரிவு (3 குதிரைகள்)
– கோலாலம்பூர் சிட்டி ஹால் (3)
– ஆர்மி எக்குவஸ்டிரியன் செண்டர் (2)
– யூனிவர்சிட்டி புத்ரா மலேசியா (3)
– யூனிவர்சிட்டி டெக்னோலஜி மலேசியா (2)
– திரங்கானு ஸ்போர்ட்ஸ் கவுன்சில் (2)
– ரோயல் திரங்கானு எண்டியுரென்ஸ் ஸ்டேபில் (8)
தவறான செலவழிப்புகள்
விளையாட்டாளர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மிகப் பெரிய அளவிலான பகுதியை என்எஸ்சி இதர நோக்கங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்பதை கணக்காய்வு வெளிப்படுத்தியுள்ளது.
ஒதுக்கப்பட்ட ரிம3.65 மில்லியனில் ரிம2.25 மில்லியன் அல்லது 61.6 விழுக்காடு முக்கிய விளையாட்டுகளை விளம்பரப்படுத்துவதற்கு செலவிடப்பட்டுள்ளது.
“வழங்கப்பட்ட நிதியை என்எஸ்சி வளர்ந்து வரும் விளையாட்டாளர்களின் மேம்பாட்டிற்காக செலவிட வேண்டுமே தவிர விளம்பரத்திற்காக அல்ல என்பது எங்களுடைய கருத்து”, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.