என்எப்சி என்ற சர்ச்சைக்குரிய தேசிய விலங்குக் கூட நிர்வாகக் கழகத்தின் பங்குதாரர்களும் வாரிய உறுப்பினர்களும் கூட்டரசு அமைச்சர் ஒருவருடைய கணவரும் குழந்தைகளும் அந்த நிறுவன நிதியில் அதிகம் செலவு பிடித்த வெளிநாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டனர்.
அந்தச் சுற்றுலாவுக்காக 800,000 ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்யப்பட்டதை அந்த நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கை காட்டுவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறினார்.
பொது நிதிகளைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட, தற்போது நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள அந்த நிறுவனத்தின் பிரச்னைகளில் இதுவும் ஒன்று என அந்த எதிர்க்கட்சித் தலைவர் கூறிக் கொண்டார்.