தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் தேர்ச்சி அறிக்கை போன்றது என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். ஆனால், இந்த அறிக்கையில் சிவப்பு மையால் எழுதப்பட்ட குறிப்புகளும் குறைந்த மதிப்பெண்களும்தாம் நிறைய உள்ளன என்றும் அது, பிஎன் அரசின் தோல்வி பற்றிக் கதைகதையாகக் கூறுகிறது என்றும் குறிப்பிட்டார்.
பிள்ளைகளின் தேர்ச்சி அறிக்கையில் சிவப்புமையால் எழுதப்பட்ட குறிப்புகளும் குறைந்த மதிப்பெண்களும் இருந்தால் பெற்றோர்கள் கவலைகொள்வார்கள். அதேபோல், இங்கு மக்கள் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை கண்டுக் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.
அந்த அறிக்கை நாட்டை நிர்வகிக்கும் ஆற்றல் அரசுக்கு இல்லை என்பதைக் காண்பிக்கிறது. அதை மேம்படுத்திக்கொள்வதில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் ஒவ்வோராண்டும் வெளிவரும் கணக்கறிக்கை நிருப்பிக்கிறது என்றாரவர்.