அரசியலமைப்பு வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி, தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் அமைச்சரவை சம்பந்தப்பட்டுள்ளது தவறு என்கிறார். ஏனெனில் அது அரசியலமைப்பு உணர்வுக்கு எதிரானதாகும்.
கூட்டரசு அரசியலமைப்பின் 107வது பிரிவின் கீழ் அந்த அறிக்கையை தலைமைக் கணக்காய்வாளர் தயாரிக்க வேண்டும். மக்களவையில் சமர்பிக்கப்படுவதற்காக அது மாமன்னரிடம் சமர்பிக்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
“அமைச்சரவை சம்பந்தப்பட வேண்டும் என எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது? அந்த நடைமுறை தவறானது. அது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க முடியும். அந்த அறிக்கையில் அமைச்சரவைக்கும் பங்கு உள்ளது என்னும் தோற்றத்தையும் அது தருகிறது”, என அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான அஜிஸ் பேரி குறிப்பிட்டார்.
“அந்த அறிக்கை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டால் அதனை ஏன் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்? அது தான் நடைமுறை என்றால் தலைமைக் கணக்காய்வாளர் பதவியே தேவை இல்லை.”
1982ம் ஆண்டு தொடக்கம் அந்த அறிக்கை மக்களவையில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்து வருவதாக தலைமைக் கணக்காய்வாளர் அம்ரின் புவாங் அக்டோபர் 21ம் தேதி கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அமைச்சர்கள் அறிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் அவற்றை விளக்குவதற்கு உதவியாக அவ்வாறு செய்யப்படுகிறது என அவர் சொன்னார்.
தாமதம் ஏன்?
அந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படாதது குறித்து கடந்த இரு வாரங்களாக பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அக்டோபர் 7ம் தேதி வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட தினத்தில் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையை வெளியிடும் நடைமுறை இருக்கும் போது அந்த அறிக்கை தாமதமாக வெளியிடப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் விளக்க வேண்டும் என புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங் கேட்டுக் கொண்டார்.
“நாங்கள் அந்த நடைமுறை குறித்து கேள்வி எழுப்பவில்லை. அது எப்போது சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு அமைச்சரவையைச் சார்ந்துள்ளதாக நான் கருதுகிறேன்,” என லியூ திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கை எப்போதும் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் அரசியலமைப்பு மௌனமாக இருந்தாலும் அந்த அறிக்கையின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு எந்தத் தாமதமும் இல்லாமல் சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அஜிஸ் பேரி கூறினார்.
“ஆகவே மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் அங்கீகாரத்துடன் யாங் டி பெர்துவான் அகோங் தலைமைக் கணக்காய்வாளர் நியமிக்கப்படுவதால் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை தலைமைக் கணக்காய்வாளர் விளக்க வேண்டும்.”
அரசாங்கச் செலவுகளை மாமன்னர் முழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு நீண்ட காலம் பிடிக்கக் கூடாது என அவர் மேலும் விளக்கினார்.
“உண்மையில் அந்த கால தாமதம் மர்மமாக இருக்கிறது”, என்றார் அஜிஸ் பேரி.
(NOTE – This is what Article 107 of the Federal Constitution on Reports of Auditor General says:
“(1) The Auditor General shall submit his reports to the Yang di-Pertuan Agong, who shall cause them to be laid before the House of Representatives.
(2) A copy of any such report relating to the accounts of a State, or to the accounts of any public authority exercising powers conferred by State law, shall be submitted to the Ruler or Yang di-Pertua Negeri of that State, who sahll cause it to be laid before the Legislative Assembly.” – Editor)