முஹைடின் விலங்குக் கூடத் திட்டம் மீது மௌனம் சாதிக்கிறார்

தேசிய விலங்குக் கூடத் திட்டம் மீது 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் “வழக்கத்திற்கு மாறானவை அல்ல” என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார்.

“அதில் வழக்கத்துக்கு மாறான விஷயமோ அல்லது தவறு ஏதும் நிகழ்ந்திருப்பதாகவோ நான் எண்ணவில்லை. ஆனால் கணக்காய்வு பலவீனங்களைக் கண்டு பிடித்துள்ளது. அவை விளக்கப்படும்”, என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

பல மில்லியன் ரிங்கிட் செலவிலான அந்தத் திட்டம் முஹைடின் விவசாய, விவசாயத் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அது இப்போது தோல்வி அடைந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அது குறித்து மேலும் கருத்துரைக்க முஹைடின் மறுத்து விட்டார். அது குறித்து விவசாய, விவசாயத் தொழில் அமைச்சர் நோ ஒமார் பதில் அளிப்பார் என்றும் அவர் சொன்னார்.

“அமைச்சர் அது குறித்து மேலும் விளக்குவார்,” என்றார் அவர்.