ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் 30,000 பேர் இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஏ (CIA) செய்தி தொடர்பாளர் டீன் பாயிட் (Dean Boyd) கூறியதாவது, ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் மொத்தமே 10,000 பேர் தான் இருப்பார்கள் என்று கருதப்பட்டது.
ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்ததுடன், 20,000 முதல் 31,500 பேர் வரை அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
குறிப்பாக கடந்த யூலை மாதத்தில் இருந்து தீவிர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இந்த இயக்கம் மேற்கொண்டுள்ளது.
மேலும் தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் உள்ள சிறைகளில் இருக்கும் சன்னி பிரிவினரையும், ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களது இயக்கத்தில் இணைத்துள்ளது.
இதுவரை இந்த இயக்கத்தில் 15,000 பேர் வெளிநாட்டவர் இணைந்துள்ளனர் என்றும் இதில் மேற்கத்திய நாட்டினர் மட்டும் 2,000 பேர் எனவும் கூறியுள்ளார்.