ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரஜையான டேவிட் ஹெய்ன்ஸின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய ராஜ்ஜியம் என பிரகடனப்படுத்தி ஆட்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதல்களால் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பல்வேறு நகரங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் போலே ஆகியோர் பிணைக்கதிகளாக பிடித்து அவர்களில் ஸ்காட்லாப்பை தலை துண்டித்து கொன்றனர்.
தங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் போலேயும் தலை துண்டித்து கொல்லப்படுவார் என்று தீவிரவாதிகள் மிரட்டியிருந்தனர்.
சில நாட்களில் போலேயும் தலை துண்டித்து கொல்லப்பட்டார். அப்போது தங்களிடம் பிணைக்கைதியாக உள்ள பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் அடுத்து தலை துண்டிக்கப்படுவார் என தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹெயின்ஸ் தலை துண்டித்து கொல்லப்பட்ட காட்சி வீடியோவில் ஒளிபரப்பாகியுள்ளது. இதன் மூலம் தங்கள் கோர முகத்தை தீவிரவாதிகள் மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியுள்ளனர்.
ஹெயின்சின் தலையை துண்டிக்கும் தீவிரவாதி அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தால் இது தான் நடக்கும் என்று எச்சரித்துள்ளார்