தீவிரவாதிகளை ஒழிக்க களமிறங்கும் 40 நாடுகள்

isis-genocideகொடூர அமைப்பாக வளர்ந்து வரும் ஐ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முயன்று வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதன்முதற்கட்டமாக அமெரிக்க ராஜங்க செயலாளர் ஜோன் கெரி, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த சுற்று பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் கெரி குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைக்கு 10 அரபு நாடுகள் உட்பட 40 நாடுகள் ஆதரவு வழங்கியதுடன், இராணுவ ஒத்துழைப்பு வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஜோன் கெரியின் இந்த சுற்று பயணத்தில் முக்கிய அம்சமாக 10 அரபு அரசாங்கங்கள் ஜெட்டா நகரில் வைத்து, ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்து கையெழுத்திட்டுள்ளன.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய 10 அரபு நாடுகள் வழங்கியுள்ளன.

வளைகுடா நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் கெரி பெற்றுள்ள வெற்றியை குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை பெண் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஜெட்டா நகர செய்தி இதழ் ஒன்றில், அமெரிக்க-அரபு கூட்டணி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க உறுதி எடுத்துள்ளது என்பதை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டியுள்ளார்.

மீண்டும் ஒரு பிணைக்கைதியின் தலையை துண்டிப்போம்: ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்