இஸ்லாமிய அரசு ஜிகாதி அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் பிணைக்கைதி ஒருவர் தோன்றும் காணொளி வெளியாகியுள்ளது. ஆனால் அடுத்து கொல்லப்படுவார் என்று முன்பு இஸ்லாமிய அரசு ஜிகாதி அமைப்பால் எச்சரிக்கப்பட்ட அலன் ஹென்னிங் இதில் இல்லை.
இந்த காணொளியில் இருப்பவர் தன்னை ஜான் கெண்ட்லீ என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ஒரு பத்திரிக்கையின் செய்தியாளராக தான் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது தான் பிடிபட்டதாக அவர் கூறுகிறார்.
ஆரஞ்சு வண்ண உடையணிந்த பிரிட்டிஷ் பணயக் கைதி, அமர்ந்த நிலையில் கேமராவைப் பார்த்துப் பேசுகிறார். கவனமாக தயாரித்துக் கொடுக்கப்பட்ட உரையை நிகழ்த்தும் அவர்- தான் கைதியாக இருப்பதாகவும் தனது உயிர் ஊசலாடுவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவும், பிரிட்டனும் மேலும் ஒரு போரில் ஏன் ஈடுபடுகின்றனர் என்று கேள்வி எழுப்பும் அவர், இஸ்லாமிக் ஸ்டேட்டின் கொள்கைகளை விளக்கும் பல நிகழ்ச்சிகளில் இது முதலாவது என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அரசு ஜிகாதி அமைப்பு ஏற்கெனவே அமெரிக்கர்கள் இருவர் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் என்று மூன்று பேரை கொன்றிருக்கிறது. இன்று வெளியாகியுள்ள இந்த காணொளியில் யாரும் கொல்லப்படுவதாக காட்டப்படவில்லை.
இன்று வெளியாகியிருக்கும் காணொளியில் இருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த பணயக்கைதி, தன்னையும் தன்னையொத்தவர்களையும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் ஏன் கைவிட்டுவிட்டன என்று இந்த காணொளியில் கேள்வியெழுப்புகிறார்.
மேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் மேலும் ஒரு போரில் ஏன் ஈடுபடுகின்றன என்று கேள்வியெழுப்பும் அவர், இஸ்லாமிய அரசின் கொள்கைகளை விளக்கக்கூடிய தொடர் காணொளிகளின் துவக்கமே இந்த காணொளி என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இந்த காணொளியில் இஸ்லாமிய அரசு ஜிகாதிக்குழுவினர் யாரும் காணப்படவில்லை. “நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்துக்கேளுங்கள்” என்கிற தலைப்பிலான இந்த காணொளி மேற்குலக பொதுமக்களைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. -BBC